தோ்தல் ஆணைக்குழுவின் தவிசாளருடைய கருத்தால் சா்ச்சை..

ஆசிரியர் - Editor I
தோ்தல் ஆணைக்குழுவின் தவிசாளருடைய கருத்தால் சா்ச்சை..

மாகாணசபைத் தேர்தல்களை இந்த ஆண்டில் உரிய காலத்தில் நடாத்த தவறும் பட்சத்தில் தேர்தல்கள் ஆணைக்குழுவானது தனது அதிகார எல்லைக்குட்பட்ட அனைத்தையும் மேற்கொண்டு தீரும் என தேர்தல்கள் ஆணைக்குழுவின் தவிசாளர் தெரிவித்தமையினால் பெரும் சர்ச்சை ஏற்பட்டது.

தேர்தல் ஆணைக்குழு அலுவலகத்தில் நேற்றைய தினம் கட்சிகளின் செயலாளர்களிற்கான கூட்டம் இடம்பெற்றபோதே மேற்கண்டவாறு தெரிவித்தபோதே குழப்பம் ஏற்பட்டது.

குறித்த சந்திப்பில் பல கட்சிகளின் பிரதிநிதிகள் கலந்துகொண்டிருந்த நிலையில் அரசு மாகாண சபைகளிற்கான தேர்தலை காலம் கடத்தினால் அது அரசியல் சாசனத்தையே மீறுவதாகவே கருதப்பட்டு எமது லிமிட்டை தாண்டிய வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டே தீரும் என்றார்.

இதன்போது கூட்டத்தில் கலந்துகொண்டிருந்த ஹெல உறுமிய உறுப்பினர்கள் பேற்படி கருத்தினை தெரிவிப்பதற்கு தவிசாளருக்கு அதிகாரம் இல்லை. தேர்தலை தீர்மானிக்கும் அதிகாரம் நாடாளுமன்றத்திற்கே உரியது எனச் சர்ச்சை எழுப்பினார்.

இருப்பினும் 17ம் திருத்தச் சட்டத்தின் பிரகாரம் தேர்தல் ஆணைக்குழுவிற்கு உண்டு என ஆணைக்கெழுவின் தவிசாளரும் ஆணைக்குழு உறுப்பினர் ரட்ண ஜீவன் கூல் ஆகியோர் தெரிவித்தனர்.

இதன்போது மீண்டும் கருத்துரைத்த உறுமயவின் பிரதிநிதி ஆணைக்குழுவின் இருவரும் பதவி விலகியே ஆகவேண்டும். எனக்கோரினார் இருப்பினும் இதற்காக நாம் பதவி விலகமுடியாது. முடிந்தால் நீங்களே விலக்குங்கள் என தவிசாளர் தெரிவித்தார்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு