SuperTopAds

பெண் பொலிஸ் உத்தியோகஸ்தருடன் அங்க சேஷ்டை!! பொறுப்பதிகாரிக்கு இடமாற்றம் - யாழில் சம்பவம்..

ஆசிரியர் - Editor I
பெண் பொலிஸ் உத்தியோகஸ்தருடன் அங்க சேஷ்டை!! பொறுப்பதிகாரிக்கு இடமாற்றம் - யாழில் சம்பவம்..

யாழ்.மாவட்டத்திலுள்ள பொலிஸ் நிலையம் ஒன்றில் பொறுப்பதிகாரியாக கடமையாற்றிய பொலிஸ் அதிகாரி தனக்கு கீழ் பணியாற்றிய பெண் பொலிஸ் உத்தியோகஸ்த்தருடன் அங்க சேஷ்டை புரிந்த நிலையில் அதிரடியாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

குறித்த சம்பவம் தொடர்பில் தெரிய வருவதாவது யாழ் மாவட்டத்திலுள்ள பொலிஸ் நிலையம் ஒன்றில் கடமையாற்றும் பொலிஸ் நிலையப் பொறுப்பு  அதிகாரியே அங்கு கடமையாற்றும் பெரும்பான்மை இனத்தைச் சேர்ந்த பெண் கான்ஸ்டபிளுடன் சேட்டையில் ஈடுபட்டு வந்துள்ளார்.

பொறுப்பதிகாரியின் பாலியல் சேட்டை தொடர்பில் குறித்த பெண் கான்ஸ்டபிள்  உயர் மட்டங்களுக்கு தெரியப்படுத்திய நிலையில் நேற்று முன்தினம் திங்கட்கிழமை விசாரணைகளுக்கு ஏதுவாக சம்பந்தப்பட்ட  அதிகாரிக்கு தற்காலிக இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.