இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜீலி சுங் வடமாகாண ஆளுனர் உட்பட பல தரப்புக்களுடன் சந்திப்பு!!

ஆசிரியர் - Editor I
இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜீலி சுங் வடமாகாண ஆளுனர் உட்பட பல தரப்புக்களுடன் சந்திப்பு!!

இலங்கைக்கான அமெரிக்க தூதர் ஜூலி சுங் யாழ்.மாவட்டத்திற்கு விஜயம் செய்தார்.

பலாலி சர்வதேச விமான நிலையம் ஊடாக இன்று யாழ்.மாட்டத்திற்கு விஜயம் செய்த அமெரிக்க தூதர், பல்வேறு தரப்புக்களையும் சந்தித்து கலந்துரையாடவுள்ளார்.

வடமாகாண ஆளுநர் பி.எஸ்.எம்.சார்ள்ஸை சந்தித்து கலந்துரையாடிய அமெரிக்க தூதர் வடக்கு மாகாணத்திற்கான சமூகப் பொருளாதார சவால்கள் மற்றும் வாய்ப்புகள் தொடர்பாக கலந்துரையாடினார்.

யாழ்ப்பாணம் பொது சன நூலகத்துக்கு இன்று காலை விஜயம் செய்து பார்வையிட்டார்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு