முதல் முறையாக எல்.பி.எல் கோப்பையை கைப்பற்றிய கண்டி அணி

ஆசிரியர் - Editor II
முதல் முறையாக எல்.பி.எல் கோப்பையை கைப்பற்றிய கண்டி அணி

லங்கா பிரீமியர் லீக் (எல்.பி.எல்) தொடரின் 4 ஆவது சீசனில் கண்டி அணி முதல் முறையாக கோப்பையை கைப்பற்றியது.

எல்.பி.எல் தொடரில் 3 முறை சாம்பியனான ஜாப்னா கிங்ஸ் அணி இறுதிப் போட்டிக்கு செல்லாததால், முதல் முறையாக வேறொரு அணி கோப்பையை கைப்பற்றும் வாய்ப்பு உருவானது.

கொழும்பில் நடந்த இறுதிப் போட்டியில் தம்புலா ஆரா மற்றும் பி லவ் கண்டி அணிகள் பலப்பரீட்சை நடத்தின.

முதலில் ஆடிய தம்புலா அணி 147 ஓட்டங்கள் எடுத்தது. தனஞ்செய டி சில்வா 40 ஓட்டங்களும், சமரவிக்ரமா 36 ஓட்டங்களும் குவித்தனர்.

பின்னர் களமிறங்கிய கண்டி அணியில் கமிந்து மெண்டிஸ் 44 ஓட்டங்களும், ஹாரிஸ் 26 ஓட்டங்களும் எடுத்து வெளியேறினர். அடுத்து வந்த தினேஷ் சண்டிமல் 24 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார். 

சதுரங்க டி சில்வா, ஆசிப் அலி ஆட்டமிழக்க அணித்தலைவர் ஏஞ்சலோ மேத்யூஸ் வெற்றிக்காக போராடினார்.

இறுதி பந்துப் பரிமாற்றத்தில் 2 பந்துகளில் ஒரு ஓட்டம் தேவை என்ற நிலையில், லஹிரு மதுஷன்கா பவுண்டரி விளாச கண்டி அணி சாம்பியன் ஆனது.

இறுதிவரை களத்தில் நின்ற மேத்யூஸ் 21 பந்துகளில் 3 பவுண்டரிகளுடன் 25 ஓட்டங்கள் எடுத்தார்.     

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு