SuperTopAds

யாழ்ப்பாணத்தை வந்தடைந்த யாழ்.குயில்

ஆசிரியர் - Editor II
யாழ்ப்பாணத்தை வந்தடைந்த யாழ்.குயில்

சூப்பர் சிங்கர் ஜூனியர் நிகழ்ச்சியில் பங்குபற்றுவதற்காக யாழ்ப்பாணத்திலிருந்து இந்தியா சென்றிருந்த பிரியங்கா இன்றையதினம் வியாழக்கிழமை மீண்டும் தாயகம் திரும்பியுள்ளார்.

இந்தியாவின் பிரபல தொலைக்காட்சியான விஜய் தொலைக்காட்சி தயாரித்து வழங்கும் சூப்பர் சிங்கர் ஜூனியர் சீசன் 10 போட்டியில் யாழ்ப்பாணத்தை சேர்ந்த சிந்துமயூரன் பிரியங்கா பங்குபற்றியிருந்தார்.

இந்நிலையில் அவரது பாடல் சுற்றானது நிறைவடைந்த நிலையில்  மீண்டும் யாழ்ப்பாணத்தை வந்தடைந்தார்.

சென்னையில் இருந்து யாழ்ப்பாண சர்வதேச விமான நிலையம் ஊடாக யாழ்ப்பாணம் வந்த பிரியங்காவுக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது .