குன்றும் குழியுமாக காணப்படும் வீதியை புனரமைப்பது யார்? மக்கள் கருத்துக்கள்
ஆசிரியர் - Editor III
குன்றும் குழியுமாக காணப்படும் வீதியை புனரமைப்பது யார்? மக்கள் கருத்துக்கள்
கல்முனை மாநகர சபைக்குட்பட்ட பெரிய நீலாவணை முதல் நிந்தவூர் வரையிலான பொதுமக்கள் இக்கரையோர பாதையினை அன்றாடம் பயன்படுத்தி வருகின்றனர்
அம்பாறை மாவட்டத்தில் அமைந்துள்ள இக்கரையோர பாதையானது பாண்டிருப்பு எல்லை வீதி கரையோர வீதியுடன் இணையும் பகுதியில் இருந்து குன்றும் குழியுமாக காணப்படுகின்றது
இதனால் இவ்வீதியினால் பயணம் மேற்கொள்ளும் மக்கள் பெரும் சிரமங்களை எதிர்கொள்வதாக ஊடகங்களிடம் தெரிவித்தனர்.
இது தவிர இவ்வீதி ஊடாக அன்றாடம் அரச ஊழியர்கள் தனியார் ஊழியர்கள் பாடசாலை மாணவர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் பயணம் செய்வதை காணக்கூடியதாக இருக்கின்றது
மழை காலங்களில் இவ்வீதி சேறும் சகதியுமாக காணப்படுவதனால் இவ்வீதியால் செல்கின்ற மீனவர்கள் பல்வேறு விபத்துகளுக்கு முகம் கொடுப்பதாகவும் சுட்டிக்காட்டுகின்றனர்
எனவே உரிய அதிகாரிகள் இவ்விடயத்தில் கவனம் செலுத்துமாறு பொதுமக்கள் வேண்டுகோள் விடுகின்றனர்