SuperTopAds

ஐக்கிய‌ காங்கிர‌ஸ் க‌ட்சியின் செயலாளர் ஷாஹிட் முபாறக் மீது தாக்குதல்

ஆசிரியர் - Editor III
ஐக்கிய‌ காங்கிர‌ஸ் க‌ட்சியின் செயலாளர் ஷாஹிட் முபாறக் மீது தாக்குதல்

ஐக்கிய‌ காங்கிர‌ஸ் க‌ட்சியின் செயலாளர் ஷாஹிட் முபாறக் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

கல்முனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட புற நகர் பகுதியில் வைத்து திங்கட்கிழமை(14) இரவு   ஷாஹிட் முபாறக் மீது இனந்தெரியாத சிலர் தாக்குதல் மேற்கொண்டு தலைமறைவாகியுள்ளனர்.

இவ்வாறு தாக்குதலுக்கு உள்ளான ஐக்கிய‌ காங்கிர‌ஸ் க‌ட்சியின் செயலாளர் ஷாஹிட் முபாறக் கல்முனை அஸ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அத்துடன் கல்முனை தலைமையக பொலிஸ் நிலையத்திலும் குறித்த சம்பவம் தொடர்பில் முறைப்பாடு வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மேலும் குறித்த சம்பவத்தில் தாக்குதலுக்கு உள்ளானவர்  ஐக்கிய‌ காங்கிர‌ஸ் க‌ட்சியின்  தலைவர்  மௌலவி முபாறக் அப்துல் மஜீத்தின் மகன் என்பதும் குறிப்பிடத்தக்கது.

சம்பவம் தொடர்பில் கல்முனை தலைமையக பொலிஸார் துரித விசாரணைகளை  மேற்கொண்டு வருகின்றனர்.