ஓய்வுபெற்ற பொலிஸ் உத்தியோகஸ்த்தர் கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில் சடலமாக மீட்பு..
ஓய்வுபெற்ற உப பொலிஸ் பரிசோதகர் ஒருவர் சொந்த வீட்டிலேயே அவரது கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில் தலையில் தாக்கி கொலை செய்யப்பட்டுள்ளார் என கந்தானை பொலிஸார் தெரிவித்தனர்.
கந்தானை வெலிகம்பிட்டிய கந்தவத்தையைச் சேர்ந்த 84 வயதுடைய ஓய்வுபெற்ற பொலிஸ் உத்தியோகத்தரான கங்காதரன் சங்கரன் என்ற நான்கு பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
உயிரிழந்தவரின் பிள்ளைகள் வெளிநாடுகளில் வசிப்பதாகவும் அவரது மனைவி உயிரிழந்ததால் இவர் வீட்டில் தனியாக வசித்து வந்தவர் என்பதும் விசாரணையில் தெரியவந்தது.
இவரது உடல் வீட்டின் சமையலறையில் கை, கால்கள் கட்டப்பட்டு தரையில் வீசப்பட்ட நிலையில் பாதி அழுகிய நிலையில் காணப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
உயிரிழந்தவரின் சடலம் பிரேத பரிசோதனைக்காக ராகம போதனா வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.
இந்தச் சம்பவம் தொடர்பில் இதுவரை எவரும் கைது செய்யப்படவில்லை.