லங்கா ஐ.ஓ.சி நிறுவனமும் பெற்றோல் விலையை உயர்த்தியது!
இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தை தொடர்ந்து லங்கா ஐ.ஓ.சி நிறுவனமும் பெற்றோல் விலையை நேற்று 31/07/2023 நள்ளிரவு முதல் அமுலுக்குவரும் வகையில் உயர்த்தியுள்ளது.
அதன்படி, இன்று நள்ளிரவு முதல் ஒக்டேன் 92 ரக பெற்றோல் லீற்றர் ஒன்றில் விலை 20 ரூபாவால் அதிகரிக்கப்படவுள்ளதாக லங்கா ஐ.ஓ.சி தெரிவித்துள்ளது.
இதற்கமைய, 92 ரக பெற்றோல் லீற்றர் ஒன்றின் புதிய விலை 348 ரூபாவாக அதிகரிக்கப்படவுள்ளது.
அதேபோல், ஒக்டேன் 95 லீற்றர் பெற்றோல் 10 ரூபாவினால் அதிகரிக்கப்படவுள்ளதுடன், அதன் புதிய விலை 375 ரூபாவாகும்.
இதேவேளை, ஒரு லீற்றர் டீசலின் விலை 2 ரூபாவினால் குறைக்கப்படவுள்ள நிலையில், அதன் புதிய விலை 306 ரூபாவாகும்.
சூப்பர் டீசலின் விலை லீற்றர் ஒன்றிற்கு 12 ரூபாவால் அதிகரிக்கப்படவுள்ளதுடன் அதன் புதிய விலை 358 ரூபாவாகும்.