தந்தையின் கத்திக் குத்து தாக்குதலுக்கு இலக்கான 10 வயது சிறுவன் வைத்தியசாலையில்..
தந்தையின் கத்திக்குத்து தாக்குதலுக்கு இலக்கான சிறவன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்படடுள்ளான்.
குறித்த சம்பவம் பொரலுவெவ - ரத்மல்கஸ்வெவ பகுதியில் நேற்று இரவு 8 மணியளவில் இடம்பெற்றிருக்கின்றது.
சம்பவத்தில் 10 வயதான சிறுவன் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளான்.
வீட்டில் ஏற்பட்ட சண்டையின் போது சிறுவன் கத்தியால் குத்தப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
எவ்வாறாயினும், சந்தேகநபரான தந்தை இதுவரை கைது செய்யப்படவில்லை, பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.