மண்வெட்டியால் அடித்துக் கொல்லப்பட்ட நபர்! சந்தேகநபர்களின் இரு தொலைபேசிகள் மீட்பு..
மண்வெட்டியால் தாக்கியதில் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நபர் சிகிச்சை பலனின்றி உயரிழந்துள்ளார்.
குறித்த நபர் அனுராதபுரம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
கெப்பித்திகொல்லாவ, கட்டுவலகலேவ பிரதேசத்தில் வசிக்கும் 64 வயதுடையவரே இவ்வாறு உயிரிழந்தவராவார்.
சம்பவதினம் உயிரிழந்த நபர் வீட்டிற்கு அருகில் உள்ள நெல் ஆலை ஒன்றில் தங்கியிருந்துள்ளார்.
குறித்த பிரதேசத்தில் வசிக்கும் இருவருக்கிடையிலான தனிப்பட்ட தகராறே இக்கொலைக்கான காரணமென பொலிஸாரின் விசாரணையில் தெரியவந்துள்ளது.
தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர்களின் 02 கையடக்கத்தொலைபேசிகளை பொலிஸார் மீட்டுள்ளதுடன்,
மேலதிக விசாரணைகளை கெப்பித்திகொல்லாவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.