யாழ்.வேலணை மத்திய கல்லூரி முன்பாக இன்றும் போராட்டம்!

ஆசிரியர் - Editor I
யாழ்.வேலணை மத்திய கல்லூரி முன்பாக இன்றும் போராட்டம்!

யாழ்.வேலணை மத்திய கல்லூரி புதிய அதிபர் நியமனத்திற்கு எதிராக பாடசாலை மாணவர்களால் போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.

வேலணை மத்திய கல்லூரி பிரதான நுழைவாயில் முன்பாக இன்று செவ்வாய்க்கிழமை(25) காலை ஒன்று கூடிய மாணவர்கள் எதிர்ப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டனர்.

இதன்போது போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களுக்கும் சில ஆசிரியர்களுக்கும் இடையே முரண்பாடான நிலைமை ஏற்பட்டதாக தெரியவருகிறது.

யாழ்ப்பாணம் – வேலணை மத்திய கல்லூரிக்கு சைவப் பாரம்பரியமிக்க அதிபரொருவரை நியமிக்குமாறு கோரி பழைய மாணவர்கள் அப்பகுதி மக்கள் கடந்த திங்கட்கிழமை (17) போராட்டத்தில் ஈடுபட்டனர்.

வேற்று மதத்தை சார்ந்த ஒருவரை அதிபராக நியமிப்பதற்கு கல்வித் திணைக்களம் நடவடிக்கை எடுத்து வருவதை சுட்டிக்காட்டியே குறித்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு