SuperTopAds

பொலிஸாரை கத்தியால் தாக்கி, 3 வயதான குழந்தையை கத்தி முனையில் பணய கைதியாக பிடித்து வைத்த நபர் கைது!

ஆசிரியர் - Editor I
பொலிஸாரை கத்தியால் தாக்கி, 3 வயதான குழந்தையை கத்தி முனையில் பணய கைதியாக பிடித்து வைத்த நபர் கைது!

மதுரங்குளி - ஜின்னவத்தை பிரதேசத்தில் முறைப்பாடு ஒன்று தொடர்பால் பார்க்கச் சென்றபோது தனது மூன்று வயதான குழந்தையை பணயக் கைதியாக பிடித்து பொலிஸாரை அச்சுறுத்திய நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்நிலையில், பிரதேசவாசிகளின் உதவியுடன் பொலிஸார் மிகுந்த பிரயத்தனத்துடன் அவரைக் கைது செய்துள்ளனர்.

சந்தேக நபர் கூரிய ஆயுதத்தால் அவரது குழந்தையை தாக்கியதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

செவ்வாய்க்கிழமை (18) மதுரங்குளி, ஜின்னவத்த கிராமத்தில் பெண் ஒருவரை ஆண் ஒருவர் தாக்குவதாக பொலிஸ் அவசர இலக்கமான 119 ஊடாக மதுரங்குளி பொலிஸாருக்கு தகவல் கிடைத்தது.

அதன்படி, இரண்டு பொலிஸ் உத்தியோகத்தர்கள் அங்கு சென்றபோது, தனது குழந்தையை பணயமாக வைத்திருந்த சந்தேகநபர் கத்தியால் இரு பொலிஸாரையும் தாக்கியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதன்போது பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவருக்கு சிறு காயங்கள் ஏற்பட்டன.

அதனையடுத்து, சம்பவ இடத்துக்குச் சென்ற மதுரங்குளி பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி சந்தேக நபரை மக்கள் ஒத்துழைப்புடன் பெரும் பிரயத்தனத்தின் பின்னர் கைது செய்துள்ளார்.