SuperTopAds

இராணுவத்தின் ஆக்கிரமிப்பில் உள்ள குளங்கள் குறித்து ஆராய இராணுவத்துடன் விசேட கலந்துரையாடல்..

ஆசிரியர் - Editor I
இராணுவத்தின் ஆக்கிரமிப்பில் உள்ள குளங்கள் குறித்து ஆராய இராணுவத்துடன் விசேட கலந்துரையாடல்..

முல்லைத்தீவில் இராணுவம், விமானப்படை, கடற்படை மற்றும் வனவள பாதுகாப்பு திணை க்களம் ஆகியவற்றினால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள குளங்களை விடுவிப்பது தொடர்பில் நாடாளுமன்ற, மாகாணசபை உறுப்பினர்கள் கூடி ஆராயவுள்ளனர். 

முல்லைத்தீவு மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டம் இன்று மாவட்ட செயலகத்தில் இடம் பெற்றிருந்தது. இதன்போது குளங்கள் தொடர்பான விடயம் கூட்டத்தில் பேசப்பட்டபோது மா வட்டத்தில் இராணுவம், கடற்படை மற்றும் விமானப்படை,

வனவள பாதுகாப்பு திணைக்களம் ஆகியவற்றினால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள குளங்கள் தொ டர்பாக மாகாணசபை உறுப்பினர் து.ரவிகரன் கருத்து தெரிவித்துள்ளார். இதன்போது பிரதி அமைச்சர் காதர் மஸ்தான் இராணுவம், 

விமானப்படை, கடற்படை மற்றம் வனவள பாதுகாப்பு திணைக்களத்திடம் உள்ள குளங்கள் தொடர்பாக கேட்டிருந்தார். இதற்கு பதிலளித்த மாகாணசபை உறுப்பினர் ரவிகரன் முல்லைத்தீவு அம்பகாமம் பகுதியில் விமானப்படையினர் சுமார் 8ஆயிரம் ஏக்கர் 

நிலத்தை ஆக்கிரமித்திருக்கும் நிலையில் அங்கு 6 குளங்களும், மக்களுடைய வயல் நிலங்களும் உள்ளடங்கியிருப்பதாக சுட்டிக்காட் டியிருந்தார். இதனையடுத்து நீர்பாசன குளங்களை ஆக்கிரமித்திருக்கும், 

கடற்படை, விமானப் படை, மற்றும் இராணுவம், வனவள திணைக்களம் ஆகியவற்றுடன் மாகாணசபை உறுப்பினர்கள் மற்றம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கலந்துரையாட ல் ஒன்றை நடாத்தி குளங்களை விடுவிப்பது தொடர்பாக ஆராய்வதெனவும் 

மேற்படி தரப்புக்களுடன் விரைவில் கலந்துரையாடல் ஒன்றுக்கான ஒழுங்குகளை மாவட்ட செயலர் மேற்கொள் ளவேண்டும். எனவும் ஒருங்கிணைப்பு குழு இணை தலமைகளால் தீர் மானிக்கப்பட்டுள்ளது.