SuperTopAds

12 வயதான மாணவியின் மார்பை தொட்ட அதிபர்! நீதிமன்றில் குற்றத்தை ஒப்புக் கொண்டார்..

ஆசிரியர் - Editor I
12 வயதான மாணவியின் மார்பை தொட்ட அதிபர்! நீதிமன்றில் குற்றத்தை ஒப்புக் கொண்டார்..

விஞ்ஞான பாடம் கற்பித்துக் கொண்டிருந்தபோது 12 வயதான மாணவியின்  மார்பகத்தை தொட்டு அநாகரிமாக நடந்து கொண்டதான குற்றச்சாட்டை ஒப்புக் கொண்டதால் அதிபர் ஒருவருக்கு  5 வருடங்களுக்கு ஒத்திவைக்கப்பட்ட ஒருவருடக் கடூழியச் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.

அநுராதபுரம் நீதிமன்ற நீதிவானும்  மேலதி நீதிவானுமான  நாலக சஞ்சீவ ஜயசூரிய  இந்த உத்தரவைர் பிறப்பித்துள்ளார். இதற்கு மேலதிகமாக, பாதிக்கப்பட்ட மாணவிக்கு  50ஆயிரம் ரூபா நட்டஈடு வழங்குமாறு குற்றஞ்சாட்டப்பட்ட அதிபருக்கு  உத்ரவிடப்பட்டுள்ளது.

2016 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 15 ஆம் திகதி அல்லது அன்றைய தினத்தில் 12 வயது  மாணவியின் மார்பகத்தை  தொட்டு இந்த குற்றச் செயலை அவர் புரிந்துள்ளார்.

குற்றவியல் சட்டத்தின் 345 ஆம் பிரிவின் கீழ் குற்றம் சாட்டப்பட்ட அதிபருக்கு எதிராக அனுராதபுரம் தலைமையகப் பொலிஸ் சிறுவர் மற்றும் பெண்கள் பணியகம் வழக்குத் தாக்கல்  செய்திருந்தது.