கண் சத்திர சிகிச்சைக்கு பின் உயிரிழந்த இளம் குடும்ப பெண்!! விசாரணை ஆரம்பம்...
கண் சத்திர சிகிச்சையின் பின் 34 வயதான பெண் ஒருவர் உயிரிழந்த சம்பவம் கொழும்பு தேசிய கண் வைத்தியசாலையில் இடம்பெற்றுள்ளது.
சம்பவத்தில் கொஸ்கொட - பொரலுகெட்டிய பகுதியை சேர்ந்த 34 வயதான ஹிமாலி வீரசிங்ஹ எனும் இரண்டு பிள்ளைகளின் தாயே உயிரிழந்துள்ளார்.
கொழும்பு கண் வைத்தியசாலையில் கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்னதாக அவருக்கு லென்ஸ் பொருத்தப்பட்டுள்ளது.
நேற்று முன்தினம் (05) அவர் வைத்தியசாலை கிளினிக்கிற்கு சென்ற சந்தர்ப்பத்தில், லென்ஸ் முறையாக பொருந்தவில்லை எனவும்,
இதன் காரணமாக உடனடியாக மீண்டும் சத்திரசிகிச்சையொன்றை மேற்கொள்ள வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நேற்று குறித்த சத்திரசிகிச்சை மேற்கொள்ளப்பட்ட நிலையில், பெண் உயிரிழந்துள்ளார். இந்த விடயம் தொடர்பில்
தேசிய கண் வைத்தியசாலையின் பணிப்பாளர் கொழும்பு ஊடகங்களின் கேள்விக்குப் பதிலளிக்கையில் சம்பவம் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது என்றார்.