SuperTopAds

4 வயது சிறுமி டெங்கு காய்ச்சலால் உயிரிழப்பு! வைத்தியர்களே காரணம் என பெற்றோர் குற்றச்சாட்டு..

ஆசிரியர் - Editor I
4 வயது சிறுமி டெங்கு காய்ச்சலால் உயிரிழப்பு! வைத்தியர்களே காரணம் என பெற்றோர் குற்றச்சாட்டு..

ஐ.டி.எச்  வைத்தியசாலையில்  கடந்த ஜூன் மாதம் 30ஆம் திகதி காச்சலுடன் அனுமதிக்கப்பட்ட சிறுமி உயிரிழந்துள்ள நிலையில் தமது பிள்ளையின் உயிரிழப்புக்கு வைத்தியர்களே காரணம் என பெற்றோர் கூறியுள்ளனர்.

வெல்லம்பிட்டி பிரதேசத்தைச் சேர்ந்த பிஹான்சா சதேவ்மினி என்ற 4 வயது சிறுமியே உயிரிழந்துள்ளார்.

ஆரம்பத்தில் டெங்கு காய்ச்சலை மருத்துவர்கள் அடையாளம் காணாததே சிறுமியின் மரணத்துக்குக் காரணம் என குற்றஞ்சாட்டப்படுகிறது.

டெங்கு ஆரம்ப  நிலையை முறையாக கண்டறிந்து சிகிச்சை அளித்திருந்தால் தமது பிள்ளையைக் காப்பாற்றியிருக்கலாம் என சதேவ்மினியின் பெற்றோர் குற்றம்சாட்டுகின்றனர்.

இந்நிலையில்    சிறுமியின்  உறுப்புகள் பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.