92 ஒக்டேன் பெற்ரோலின் விலை அதிகரிப்பு! நள்ளிரவு முதல் அமுல்...
நேற்று (30/07/2023) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் எரிபொருள் விலைகளில் திருத்தம் கொண்டுவரப்பட்டுள்ளது.
அதற்கமைய, 92 ரக பெற்றோல் லீட்டருக்கு 10 ரூபாவால் அதிகரித்து 328 ரூபாவாகவும்,
ஒக்டேன் 95 ரக பெற்றோல் 20 ரூபா குறைந்து 365 ரூபாவாகவும், சூப்பர் டீசல் 6 ரூபாய் அதிகரித்து 346 ரூபாவாகவும்,
ஓட்டோ டீசல் 2 ரூபாவாகவும் குறைந்து 308 ரூபாவாகவும் விற்பனை செய்யப்பட உள்ளது.
மேலும் மண்ணெண்ணெய் 9 ரூபாவினால் குறைக்கப்பட்டு 236 ரூபாவாகவும் விற்பனை செய்யப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.