முன்னாள் அமைச்சர் விஜயகலா மகேஷ்வரன் பயணித்த வாகனம் கோர விபத்தில் சிக்கியது!!

ஆசிரியர் - Editor I
முன்னாள் அமைச்சர் விஜயகலா மகேஷ்வரன் பயணித்த வாகனம் கோர விபத்தில் சிக்கியது!!

முன்னாள் இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் பயணித்த வேன் முந்தல் மங்களஎலிய பகுதியில் விபத்துக்குள்ளாகியுள்ளதாக முந்தல் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

விபத்தில் படுகாயமடைந்த அவர் சிலாபம் ஆதார வைத்தியசாலையின் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருவதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்துக் கொண்டிருந்த போது, முந்தல மங்களஎலிய பகுதியில் அவர் பயணித்த  வேன் வீதிக்கு எதிர்த்திசையில் சென்று மரத்தில் மோதியதாக பொலிஸார் தெரிவித்தனர்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு