மெக்சிக்கோவில் ஒரு நாளில் அரங்கேறிய கொடுமை!-
மெக்சிகோவில் போதைப் பொருள் கடத்தல் கும்பலால் 14 பேர் பல்வேறு இடங்களில் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
மெக்சிகோ – அமெரிக்க எல்லையில் உள்ள சியுடாட் ஜூவாரஸ் (Ciudad Juarez) நகரில் நேற்று 3 இடங்களில் துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் அரங்கேறியுள்ளன.
தெற்குப் பகுதியில் உலகக் கோப்பைக் கால்பந்து போட்டியைப் பார்த்துக் கொண்டிருந்தவர்கள் மீது கும்பல் ஒன்று நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 6 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
இதேபோல், மற்ற இரு இடங்களிலும் 8 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர். போதைப் பொருட்களைக் கடத்தும் கும்பல்களுக்கு இடையே நிலவும் போட்டியே இத்தகைய வன்முறைகளுக்கு காரணம் என மெக்சிகோ பொலிசார் தெரிவித்துள்ளனர்.
சியுடாட் ஜூவாரஸ் (Ciudad Juarez) நகரில் மட்டும் கடந்த ஒரு மாதத்தில் 128 பேர் இதுபோன்று கொல்லப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.