யாழ்.நெல்லியடியில் வீடு உடைத்துக் கொள்ளை! 24 வயதான இளம்பெண் நகைகளுடன் கைது..
யாழ்.நெல்லியடி பகுதியில் சுமார் 8 லட்சத்து 80 ஆயிரம் ரூபாய் பெறுமதியான நகைகளை திருடிய குற்றச்சாட்டில் 24 வயதான பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
நெல்லியடி - பொன் கந்தையா வீதியில் உள்ள வீடொன்றில் குறித்த கொள்ளை சம்பவம் நேற்றுமுன்தினம் இடம்பெற்றுள்ளது.
சம்பவம் இடம்பெற்ற வீட்டுக்கு அருகில் உள்ளவர்களினாலேயே கொள்ளையிடப்பட்டுள்ளது.
வீட்டின் உரிமையாளர் வெளியில் சென்றுவிட்டு மதியம் 1 மணியளவில் வீட்டுக்கு வந்தபோது வீட்டின் கதவு உடைக்கப்பட்டிருத்ததை கண்டுள்ளார்.
இதனையடுத்து உள்ளே சென்று பார்த்தபோது நகைகள் கொள்ளையிடப்பட்டமை தெரியவந்துள்ளது.
இதனையடுத்து சம்பவம் குறித்து நெல்லியடி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு வழங்கப்பட்டுள்ளது.
முறைப்பாட்டின் அடிப்படையில் விசாரணைகளை ஆரம்பித்து 1 மணித்தியாலத்தில் சந்தேகநபரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
சந்தேகநபரிடம் நடத்திய விசாரணையில் 3 லட்சம் ரூபாய்க்கு அடகு வைக்கப்பட்டிருந்த தாலிக்கொடி மீட்கப்பட்டுள்ளது.
அடகுவைத்த பணத்தில் 2லட்சத்தி 92 ஆயிரம் பணமும் மீட்க்கப்பட்டுள்ளது. மற்றைய நகைகள் பிறிதொரு வீட்டில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளது.