SuperTopAds

பாண் மற்றும் சிற்றுண்டிகளின் விலையை 10 ரூபாவால் குறைக்க அரசாங்கம் கோரிக்கை..

ஆசிரியர் - Editor I
பாண் மற்றும் சிற்றுண்டிகளின் விலையை 10 ரூபாவால் குறைக்க அரசாங்கம் கோரிக்கை..

பாண் மற்றும் சிற்றுண்டிகளின் விலைகளை 10 ரூபாவால் குறைக்குமாறு கோரிக்கை விடுத்துள்ளதாக வர்த்தக அமைச்சர் நளின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

மேலும், கோதுமை மாவின் விலை நிலைமை தொடர்பில் அவர் கூறுகையில்,

கோதுமை மாவின் விலை 430 ரூபாவாக காணப்பட்டது. தற்போது சந்தையில் 170, 160 ரூபாவாக காணப்படுகின்றது.

தட்டுப்பாடுகள், விலை அதிகரிப்பை தவிர்ப்பதற்காகவே கோதுமை மாவை அத்தியாவசிய பொருளாக அறிவித்துள்ளோம். 

எதிர்காலத்தில் கோதுமை மாவின் விலை ஒருபோதும் அதிகரிக்கப்படாது என்ற உத்தரவின் காரணமாகவே பேக்கரி பொருட்களின் விலைகளை குறைக்கலாம் எனவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.