பணத்தை திருடியவரே பொலிஸ் நிலையத்திற்கு சென்று முறைப்பாடு! பொலிஸார் சந்தேகமடைந்ததால் சிக்கினார்..
விகாராதிபதி ஒருவருக்கு சொந்தமான சுமார் ஒரு லட்சத்து 25 ஆயிரம் ரூபாய் பணத்தை திருடிவிட்டு பொலிஸ் நிலையத்திற்கு சென்று முறைப்பாடு செய்த ஊழியர் ஒருவர் கைதுசெய்யப்பட்டதாக கொழும்பு குற்றத் தடுப்புப் பிரிவு தெரிவித்துள்ளது.
கடந்த 12ஆம் திகதி இந்த திருட்டு இடம்பெற்றுள்ளது. இந்த திருட்டு தொடர்பில் முறைப்பாடு செய்த ஊழியர் மீது சந்தேகமடைந்த பொலிஸார் நீண்ட நேர விசாரணைகளை முன்னெடுத்தபோது
தனக்கு போதிய சம்பளம் கிடைக்காததல் தான் இவ்வாறு திருடியதாக பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார். பொலிஸாரை தவறாக வழிநடத்துவதற்காக ஜன்னல் கண்ணாடிகளை அகற்றியதாகவும் சந்தேகநபர் மேலும் தெரிவித்துள்ளார்.
63 வயதான சந்தேக நபர் ஹோமாகம பிரதேசத்தை சேர்ந்தவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.