காலில் ஏற்பட்ட காயத்திற்கு சிகிச்சை பெற சென்றவரை கொலை செய்த கும்பல்!!
காலில் ஏற்பட்டிருந்த காயம் ஒன்றுக்கு தனியார் வைத்தியசாலையில் சிகிச்சை பெற சென்றிருந்த ஒருவரை நேற்று வெள்ளிக்கிழமை (16) குழுவொன்று கூரிய ஆயுதங்களால் தாக்கி கொலைசெய்துவிட்டு அங்கிருந்து வாகனம் ஒன்றில் தப்பிச்சென்றுள்ளது.
இதன்போது கொகரதுவ, பெலவத்த பகுதியைச் சேர்ந்த 38 வயதுடைய நபரே உயிரிழந்துள்ளார்.
விசாரணைகளின் பின்னர் சடலம் களுத்துறை நாகொட வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் கூறினர்.
குறித்த நபர் காலில் ஏற்பட்ட காயத்துக்கு சிகிச்சை பெறுவதற்காக பெலவத்தையில் உள்ள தனியார் மருத்துவ நிலையத்துக்கு சென்றுள்ளார்.
இந்நிலையில், குறித்த பகுதிக்கு வேனில் வந்த குழுவினர் உயிரிழந்த நபரை கூரிய ஆயுதங்களால் தாக்கிவிட்டு தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.
இவ்வாறிருக்க, இதற்கு முன்னர் குறித்த நபர் வீட்டில் இல்லாத வேளையில், அங்கு வந்த இனந்தெரியாத நபரொருவர் கொலை மிரட்டல் விடுத்துச் சென்றதாகவும் உயிரிழந்தவரின் தந்தை பொலிஸாருக்கு வாக்குமூலம் அளித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.