SuperTopAds

பேக்கரி வேலைக்குச் சென்று கொண்டிருந்த மனைவியை மறைந்திருந்து கத்தியால் குத்தி கொன்ற கணவன்...

ஆசிரியர் - Editor I
பேக்கரி வேலைக்குச் சென்று கொண்டிருந்த மனைவியை மறைந்திருந்து கத்தியால் குத்தி கொன்ற கணவன்...

பேக்கரி ஒன்றில்  பணிபுரிந்த  பெண்ணொருவர் கணவரால் கத்தியால் குத்திக் படுகொலை செய்யப்பட்டுள்ளதாக வென்னப்புவ பொலிஸார் தெரிவித்தனர்.

நேற்று புதன்கிழமை (14) அதிகாலை 2.00 மணியளவில் இந்தக் கொலைச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. 

ஹட்டன் வட்டவளை பிரதேசத்தில் வசித்து வந்த சத்தியவேலு நதிகா என்ற 32 வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தாயே இவ்வாறு படுகொலை செய்யப்பட்டுள்ளார்.

திருமணத்தின் பின்னர் கணவருடன் ஹட்டன் வட்டவளை பகுதியில் வசித்து வந்துள்ளார். கணவருடன் வாழ முடியாது என்று கூறி, 

இரண்டு வருடங்களுக்கு முன் இந்த பேக்கரி பொருட்கள்  தயாரிப்பு நிலையத்தில் வேலைக்குச் சேர்ந்துள்ளமை விசாரணைகளில் தெரிய வந்துள்ளது.

அதன்பிறகு கணவன் பலமுறை தொலைபேசியில் அழைத்து வீட்டுக்கு வருமாறு கூறியும் தன்னுடன் வாழ முடியாது எனக் கூறி மறுத்துள்ளார்.

இதன் காரணமாக அவருக்கு பல தடவைகள் கொலை மிரட்டல்கள் வந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சம்பவத்துக்கு  முந்தைய நாள் இரவிலிருந்தே பெண்ணின் கணவர் குறித்த  பேக்கரி அருகே தங்கியிருந்துள்ளார். 

அதிகாலை, 2:00 மணியளவில், பேக்கரிக்கு தேவையான வேலைகளைச் செய்வதற்காக அவரது மனைவி சென்றபோது மறைந்திருந்த கணவர், 

அவரை மார்புப் பகுதி மற்றும் தலைப் பகுதியில் பலமுறை கத்தியால் குத்தியுள்ளார்.

இதனால் பலத்த காயமடைந்த பெண் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

Radio