யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்துள்ள இந்திய இராஜதந்திரிகள் குழு..

ஆசிரியர் - Editor I
யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்துள்ள இந்திய இராஜதந்திரிகள் குழு..

இலங்கைக்கு விஜயம் செய்துள்ள் இந்திய இராஜதந்திரிகள் குழு நேற்று செவ்வாய்க்கிழமை மாலை யாழ்ப்பாண சர்வதேச விமான நிலையத்தின் ஊடாக யாழ்ப்பாணம் வருகை தந்துள்ளது.

குறித்த குழுவை யாழ்.இந்திய துணை தூதர் ராகேஷ் நடராஜ் ஜெபாஸ்கரன் விமான நிலையத்தில் வரவேற்றதுடன் பருத்தித்துறை முனைப்பகுதியை பார்வையிட்டனர்.

இன்று புதன்கிழமை இந்திய அரசின் நிதி பங்காளிப்புடன் அமைக்கப்பட்ட யாழ்ப்பாணம் கலாச்சார மத்திய நிலையத்தையும் மேலும் சில இடங்களையும் இந்த குழு பார்வையிடவுள்ளது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு