SuperTopAds

வடமாகாண ஆளுநர் திருமதி பி.எஸ்.எம்.சாள்ஸை சந்தித்துப் பேசிய நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன்..

ஆசிரியர் - Editor I
வடமாகாண ஆளுநர் திருமதி பி.எஸ்.எம்.சாள்ஸை சந்தித்துப் பேசிய நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன்..

வடமாகாண ஆளுநர் பி.எஸ்.எம். சார்ள்ஸை, நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் நேரில் சந்தித்துப் பேச்சு நடத்தியுள்ளார்.

யாழ்ப்பாணத்தில் உள்ள ஆளுநர் அலுவலகத்தில் நேற்று திங்கட்கிழமை (12) நடைபெற்ற இந்தச் சந்திப்பின் போது வடக்கில் மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள், எதிர்கால வளர்ச்சித் திட்டங்கள், நிர்வாக நடவடிக்கைகள் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டன.

வடமாகாண ஆளுநராக இருந்த ஜீவன் தியாகராஜா ஐனாதிபதியால் நீக்கப்பட்டு புதிய ஆளுநராக சார்ள்ஸ் நியமிக்கப்பட்டிருக்கின்ற நிலையில் முதல் தடவையாக இந்தச் சந்திப்பு இடம்பெற்றுள்ளது.