SuperTopAds

அரசியலில் பரம எதிாிகள் என மக்கள் நம்பிய அரசியல் தலைவா்கள் சிாித்த முகத்துடன் ஒரே மேடையில்..

ஆசிரியர் - Editor I
அரசியலில் பரம எதிாிகள் என மக்கள் நம்பிய அரசியல் தலைவா்கள் சிாித்த முகத்துடன் ஒரே மேடையில்..

“முதலமைச்சர் பேசுகிறார்” நூல் வெளியீட்டு விழா மேடையில் அரசியலில் பரம எதிரிகள் என மக்களால் நம்பப்பட்டுவந்த பல அரசியல் தலைவர்கள் ஆசுவாசமாக கலந்து கொண்டிருந்த காட்சியை நீண்டகாலத்தின் பின் இன்று பார்க்க கூடியதாக இருந்தது. 

வடக்கு மாகாண முதலமைச்சர் சீ.வீ.விக்கினேஸ்வரனின் இரண்டு வருட உரைகளைத் தொகுத்து நீதியரசர் பேசுகிறார் எனும் தலைப்பிலான நூல் இன்று யாழ் வீரசிங்கம் மண்டபத்தில் நேற்று வெளியிட்டு வைக்கப்பட்டது. 

இந் நிகழ்வில் கலந்து கொள்வதே முன்னர் சந்தேகமாக இருந்த கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான இரா சம்மந்தன் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு நூலையும் வெளியிட்டு வைத்தார்.

இதற்கு மேலதிகமாக கடந்த சில வருடங்களாக முதலமைச்சருடன் பகிரங்கமாகவே ஊடகங்களுடாக முரண்பட்டு வருகின்ற கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினரும் முதலமைச்சரின் மாணவனான எம்.ஏ.சுமந்திரனும்

இந்த நிகழ்வின் ஆரம்பித்திலேயே வந்து நிகழ்வு முடிவடையும் வரையில் நிகழ்வில் கலந்து கொண்டிருந்தார். அதே போன்று வட மாகாண முதலமைச்சர் நியமித்ததில் தான் தவறு இழைத்துள்ளதாகவும் 

இனிமேல் அந்தத் தவறை இழைக்க மாட்டேன் என்றும் அடுத்த மாகாண முதலமைச்சராகப் போட்டியிட விருப்பமும் தெரிவித்திருக்கின்ற மாவை சேனாதிராசாவும் முதல்வரின் நிகழ்வு ஆரம்பம் முதல் முடிவடையும் வரையில் கலந்த கொண்டிருந்தார்.

இவ்வாறு அண்மைக்காலமாக முதல்வருடன் பகிரங்கமாகவும் ஊடகங்களுடாகவும் முரண்பட்டு எதிரும் புதிருமாய் செயற்பட்டு வருகின்ற கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்கள் முதல்வரின் நூல் வெளியீட்டில் 

ஒருமித்து கலந்து கொண்டிருந்தமை  குறிப்பிடத்தக்கது. இதே வேளை மிக நீண்ட கலத்திற்குப் பின்னர் இவர்கள் அனைவரும் ஒரே மேடையில் ஒன்றாகத் தோன்றியிருப்பதும் குறிப்பிடத்தக்கது.

மேலும் இந்நிகழ்வில் தமிழ்தேசிய மக்கள் முன்னணி மற்றும் ஈ.பி.டி.பி உள்ளிட்ட பிற கட்சிகளின் பிரதிநிதிகளும் கலந்து கொண்டிருந்தனா்.