SuperTopAds

கணாமல்போன மகனை மறைத்து வைத்துள்ளதாக கூறி பெண் ஒருவருடன் மோதல்! பெண்ணின் மாமன் பலி..

ஆசிரியர் - Editor I
கணாமல்போன மகனை மறைத்து வைத்துள்ளதாக கூறி பெண் ஒருவருடன் மோதல்! பெண்ணின் மாமன் பலி..

கொழும்பு - தெஹிவளை ஓபன் பகுதியில் நேற்றிரவு (10) இரு குழுக்களுக்கிடையில் ஏற்பட்ட வாக்குவாதத்தை தொடந்து நடந்த தாக்குதலில் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார்.

ஓபன் பகுதியில் உள்ள மீனவர்கள் குடியிருப்பில் வசித்து வந்த 69 வயதுடைய நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

பெண் ஒருவர் தனது மகனுடன் தகாத உறவில் ஈடுபட்டதாக கூறி தர்க்கத்தில் ஈடுபட்ட தந்தை பெண் ஒருவரை கத்தியால் குத்த முயன்றபோது குறித்த பெண்ணின் மாமனார் மீது கத்திக் குத்து பட்டுள்ளது. 

இதனால் படுகாயமடைந்த நபர் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும் போது உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

தாக்குதலை நடத்திய 52 வயதான "புஞ்சா" என்ற பிரசன்னா பிரதேசத்தை விட்டு தப்பிச் சென்றுள்ளதுடன், சந்தேக நபரை கைது செய்வதற்கான மேலதிக விசாரணைகளை தெஹிவளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

சந்தேகநபரின் மகன் காணாமல் போய் பல நாட்களாகிவிட்ட நிலையில், குறித்த பெண் தனது மகனை மறைத்து வைத்திருப்பதாக குற்றம் சுமத்தி இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

மேலும் குறித்த பெண் திருமணமான பெண் எனவும் அவரது கணவர் போதைப்பொருள் பாவனைக்காக தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார் எனவும் தெரியவந்துள்ளது.