புதிய அரசியலமைப்பு ஊடாக தமிழ் மக்கள் எதிா்பாா்க்கும் தீா்வை பெற முடியும், தமிழ் தலமைகள் இனியும் பிாிந்து நிற்க்ககூடாது. இரா.சம்மந்தன் கருத்து..

ஆசிரியர் - Editor
புதிய அரசியலமைப்பு ஊடாக தமிழ் மக்கள் எதிா்பாா்க்கும் தீா்வை பெற முடியும், தமிழ் தலமைகள் இனியும் பிாிந்து நிற்க்ககூடாது. இரா.சம்மந்தன் கருத்து..

புதிய அரசியலமைப்பு ஒன்றை உருவாக்கி அதன் ஊடாக தமிழ் மக்கள் எதிா்பாா்க்கும் வகையிலான ஒரு தீா்வினை பெற்றுக் கொள்வதற்கு சந்தா்ப்பங்கள் இருக் கின்றன. அதனை தவற விடக்கூடாது என கூறியிருக்கும் எதிா்கட்சி தலைவரும், தமிழ்தேசிய கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்மந்தன், 

இந்த சந்தா்ப்பத்தில் தமிழ் அரசியல் தலமைகள் ஒன்றுபடவேண்டும். எனவும் அவ்வாறு ஒன்றுபடாமல் பிாிந்து நிற்பதனால் தமிழ் மக்கள் சந்திக்கப்போம் அழிவு களுக்கு நாங்களும் காரண கா்த்தாக்கள் ஆகுவோம் எனவும் கூறியிருக்கின்றாா். 

”முதலமைச்சா் பேசுகிறாா்” என்னும் தலைப்பில் வடமாகாண முதலமைச்சா் தனது ஆட்சிக்காலத்தில் ஆற்றிய உரைகளின் தொகுப்பு நுால் வடிவில் இன்றைய தினம் வெளியிடப்பட்டது. இந்நிகழ்வில் உரையாற்றும்போதே எதிா்கட்சி தலைவரும், கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்மந்தன் இவ்வாறு கூறியுள்ளாா்.

இதன்போது மேலும் அவா் கூறுகையில், தமிழ் மக்கள் இன்று எதிர் கொள்ளும் அதிமுக்கிய பிரச்சினையாக தேசிய பிரச்சினைக்கான நிரந்தர தீர்வே ஆகும்.  இந்த தீர்வி விடயத்தை சர்வதேச ரீதியில் எவ்வாறு அனுக் போகின்றோம், 

தமிழ் மக்கள் என்ற வகையில் விசேடமா வட,கிழக்கில் எவ்வாறு இனப்பிரச்சினைக்காக தீர்வினை அனுகப் போகின்றோம் என்று முடிவெடுக்க வேண்டிய தேவை இன்று உள்ளது. 

நாடு முழுவதும் மாகாண சபைகள் உருவாக்கப்பட்டுள்ளன. அனைத்து மாகாணங்களும் உச்ச அதிகாரத்தை கோருகின்றார்கள். மத்திய அரசின் தலையீடு இருக்கக் கூடாது என்று கோருகின்றார்கள்.  அதில் நாங்களும் அக்கறையாக இருக்கின்றோம்.   

நாங்கள் எவரையும் பகைக்க வேண்டிய அவசியம் இல்லை. எல்லோருடனும் நாங்கள் நல்லுறவு பேண வேண்டும்.  ஏனைய நாடுகளில் பல்வேறு மதங்கள், இனங்களைச் சார்ந்த மக்கள் வாழும் பிரதேசங்களல் எவ்வாறான ஆட்சி முறைகள் பின்பற்றப்படுகிற்னவோ 

அவ்வாறான ஆட்சி முறை எமது நாட்டிலும் பின்பற்றப்பட வேண்டும்.  இதனை தென்பகுதி மக்கள் அறிந்து கொண்டு வருகின்றார்கள். தென்பகுதி மக்கள் அனைவரையும் துவேச வாதிகளாக நாங்கள் கருதக் கூடாது. துவேசமற்றவர்களும் இருக்கின்றார்கள்.

இன்று அரசியல் சாசனத்தை உருவாக்குவதற்கு முயட்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. அந்த முயட்சியை முன்னெடுத்து, அதன் ஊடாக நிரந்தர அரசியல் தீர்வினை ஏற்படுத்துவதற்கு வழியிருக்குமாக இருந்தால். ஆந்த சந்தர்ப்பத்தை இழக்க கூடாது. 

அடிப்படை விடயங்களை நாங்கள் விட்டுக் கொடுக்க முடியாது. மக்களின் பாதுகாப்பை, உரிமைகளை, உரித்துக்களை அங்கிகரிக்கின்ற தீர்வினை அந்த அரசியல் சாசனத்தின் ஊடாக பெற்றுக் கொள்ளக் கூடிய வழியிருக்குமாகா இருந்தால், 

 மாகாண சபையினை ஒரு தீர்வாக நாங்கள் ஏற்க முடியாது. 1956 ஆம் ஆண்டில் இருந்து இந்த நாட்டில் உள்ள ஆட்சி முறை தமிழ் மக்களுக்கு உரியதல்ல என்று தேர்தல் ரீதியிலும், ஜனநாயக ரீதியிலும் முடிவுகளை எடுத்துள்ளார். 

ஆட்சி முறை மாற்றப்பட வேண்டும் என்றும் முடிவெடுத்துள்ளார்கள். 1956 ஆம் ஆண்டு முதல் இந்த நாட்டின் ஆட்சி முறை தமிழ் மக்கள் மீது திணிக்கப்பட்டுள்ளது.  இவற்றை அடைவதற்கு நாங்கள் ஒன்றுமையாக இருக்க வேண்டும். ஒருமித்து, ஒரு தூணாக  நிற்க வேண்டும். 

2012 ஆம் தை மாதம் 8 ஆம் திகதி நாங்கள் வழங்கிய தீர்வு இந்த நாட்டில் பல மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளது. தமிழ் மக்கள் தமது ஒன்றுமையின் ஊடாக தங்களுடைய தலைவிதியை நிர்ணயித்தது மட்டுமல்லாமல், இந்த நாட்டின் ஆட்சியையே மாற்றியமைத்துள்ளார்கள். 

இந்த ஒற்றுமையான நிலமை தொடர வேண்டும். அந்த ஒற்றுமை பேணிப் பாதுகாக்கப்பட வேண்டும். வேறுபட்ட கருத்துக்கள் இருந்தாலும், அதை பேசி தீர்க்க வேண்டும். ஒருமித்து நிற்க வேண்டும். எவ்விதமான பிரிவினைக்கும் இடமில்லை. அதை அனைவரும் உணர வேண்டும். 

ஜனாதிபதி தேர்தல் முடிந்த பின்னர் நானும், பிரதமர் ரணில் விக்கரமசிங்கவும், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை சந்தித்தோம். அப்போது எமக்கு சொல்லப்பட்டது முன்னாள் ஜனாதிபதி மகஹிந்த ராஜயபச்சவை சந்தித்து அரசியல் தீர்வு தொடர்பில் பேச வேண்டும் என்று. 

சில தினங்களுக்கு பின்னர் கூட்டம் ஒழுங்கு செய்யப்பட்டது. இருவரும் மஹிந்த ராஜபக்சவை சந்தித்தோம்.  அப்போது என்னை பார்த்து தன்னுடைய தோல்விக்கு பாரிய பூரண கர்த்தா நீர் என்று மஹிந்த தெரிவித்திருந்தார். 

தமிழ் மக்களுடைய ஆதரவினை பெற்றால் மட்டுமே ஆட்சிப்பீடம் ஏறமுடியும் என்ற நிலை உள்ள போது, தமிழ் மக்கள் அனைவரும் ஒன்றுமையாக நின்ற வேண்டும். எங்களுக்குள் நாங்கள் பிரிந்து செல்வோமாக இருந்தால் மக்களை நாங்கேளே அழிப்போம். அதற்கு நாங்கள் இடமளிக்க கூடாது என்றார்.