கிணற்றில் குளித்துவிட்டு வீட்டுக்கு சென்ற மாணவியை பலாத்காரம் செய்ய முயற்சி!
தனது வீட்டு கிணற்றில் குளித்துவிட்டு வீட்டுக்குச் சென்று கொண்டிருந்த பாடசாலை மாணவியை ஒருவர் பாலியல் துஷ்பிரயோகம் செய்ய முயன்ற சம்பவம் இடம்பெற்றுள்ளதாக நிட்டம்புவ தலைமையகப் பொலிஸார் தெரிவித்தனர்.
நேற்று செவ்வாய்க்கிழமை (06) இரவு 11 மணியளவில் இடம்பெற்ற இந்தச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது,
மாணவி தனது குளித்த பின்னர் துவாய் ஒன்றை அணிந்து கொண்டு வீட்டுக்குச் சென்று கொண்டிருந்தபோது இருட்டில் மறைந்திருந்த ஒருவர் பாலியல் துஷ்பிரயோகம் செய்ய முயன்றுள்ளார்.
இந்நிலையில் மாணவி எழுப்பிய அலறல் சத்தம் கேட்ட தாய் உடனடியாக அங்கு சென்று மாணவியை பாதுகாத்து வீட்டுக்குச் அழைத்துச் சென்று பின்னர் பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளனர்.
இதனையடுத்து சந்தேக நபரை கைது செய்வதற்கான விசாரணைகளை நிட்டம்புவ தலைமையக பொலிஸ் பிரிவின் சிறுவர் மற்றும் மகளிர் பணியகம் மேற்கொண்டு வருகிறது.