தமிழ்தேசிய கூட்டமைப்பின் இரு நாடாளுமன்ற உறுப்பினா்களிடமிருந்து பதவி விலகல் கடிதத்தை பெறும்படி கட்சி தலமை அறிவுறுத்தல்..
சாந்தி சிறீஸ்காந்தராயா , துரைரட்ணசிங்கம் ஆகியோரிடம் இருந்து பதவி விலகல் கடிதங்களை கோாிப் பெறுமாறு கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தமிழ் அரசுக் கட்சியின் செயலாளருக்கு அறிவுறுத்தியுள்ளார்.
இலங்கை தமிழ் அரசுக் கட்டிசியின் நாடாளுமன்ற வெகுமதி ஆசணங்கள் நாடாளுமன்ற ஆயுள்காலத்தின் அரைவாசிக் காலம் அடிப்படையில் பங்கீடு செய்வதாக தீர்மானிக்கப்பட்டே தற்போதைய
இரு நாடாளுமன்ற உறுப்பினர்களிற்கும் குறித்த பட்டியல் வழங்கியதனால் அவ்விடத்திற்கு பட்டியலில் உள்ள ஏனையவர்களிற்கும் சந்தர்ப்பம் வழங்கப்பட வேண்டும். என கட்சியின் சிலர் கோரிக்கை விடுத்திருந்தனர்.
இந்த நிலையிலேயே குறித்த விடயத்தினை அடுத்த கட்டத்திற்கு நகர்த்திச் செல்லும் நோக்கில் தற்போது பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர்களாக உள்ள இரு நாடாளுமன்ற உறுப்பினர்களையும் அழைத்து தீர்மானத்தைக் கூறி அவர்களின் ஓப்புதலுடன் பதவி விலகல் கடித்த்தினை கோருமாறு அறிவுறுத்தியுள்ளார்.
இருப்பினும் குறித்த விடயம் தொடர்பில் தமிழ் அரசுக் கட்சியின் செயலாளர் இரு நாடாளுமன்ற உறுப்பினர்களின் கவனத்திற்கு மேற்படி விடயத்தினைக் கொண்டு செல்லவில்லை என்றும் தெரிவிக்கப்படுகின்றது.