SuperTopAds

தமிழ்தேசிய கூட்டமைப்புக்கும், இரா.சம்மந்தனுக்கும் விஸ்வாசமாகவே இப்போதும் இருக்கிறேன், கொடுத்த கையை கடிக்கும் பழக்கம் எனக்கில்லை..

ஆசிரியர் - Editor I
தமிழ்தேசிய கூட்டமைப்புக்கும், இரா.சம்மந்தனுக்கும் விஸ்வாசமாகவே இப்போதும் இருக்கிறேன், கொடுத்த கையை கடிக்கும் பழக்கம் எனக்கில்லை..

தமிழ்தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்மந்தன் என்னை இந்த முதலமைச்சர் பதவிக்கு கொண்டுவந்து இந்த ஆசனத்தில் அமரவைத்தார். அந்தவகையில் இரா.ச ம்மந்தனுக்கும், தமிழ்தேசிய கூட்டமைப்புக்கும் நான் இன்றும் விஸ்வாசம் உள்ள ஒருவனாகவே இருந்து கொண்டிருக்கின்றேன். 

கொடுத்த கையை கடிக்கும் பழக்கம் எனக்கு இருந்ததில்லை. அதே சமயம் உண் மைகளை உள்ளபடி வெளிப்படுத்தாமல் இருக்க இயலாதவன் நான். ஆதலால் என க்கும் கட்சிக்குமிடையில் விரிசல் உண்டானபோதும், என்னை புரிந்து கொண்டு ஒ வ்வொரு நடவடிக்கைகளையும் எடுத்தவர் இரா.சம்மந்தன்

ஆனாலும் கட்சியில் சிலர் என்னை வெளியேற்றவேண்டும் என இலக்கு வைத்துள் ளார்கள். இவ்வாறான நிலையில் எனது சேவை மக்களுக்கு தேவையா? என்பதை மக்களே தீர்மானிக்கட்டும். என வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் கூ றியுள்ளார். 

“முதலமைச்சர் பேசுகிறார்” என்ற தலைப்பில் முதலமைச்சர் தனது ஆட்சிக்காலத் தில் ஆற்றிய உரைகளின் தொகுப்பு நூலக உருவாக்கப்பட்டு இன்றைய தினம் ய hழ்.வீரசிங்கம் மண்டபத்தில் வெளியீடு செய்யப்பட்டது. இந்நிகழ்வில் உரையாற்றும் போதே முதலமைச்சர் மேற்கண்டவாறு கூறியுள்ளார். 

இதன்போது மேலும் அவர் கூறுகையில், 

சம்பந்தன் அவர்களின் வருகையாலோ என்னவோ கூட்டணி சேர்ந்த பலர் இந்தக் கூட்டத்தில் பங்குபற்ற வந்துள்ளனர். எது எவ்வாறு இருப்பினும் சொல்ல வேண்டிய வற்றைத் துணிந்து சொல்லக் கூடிய தகைமை பெற்றவர் அவர். கொடுப்பனவுக ளுக்காகக் கொள்கைகளைக் கைவிடாதவர் அவர். 

அவர் இந்தக் கூட்டத்திற்கு அணிகலன் சேர்த்துள்ளார். அரசியல் ரீதியாக எமது எல்லாக் கட்சிகளின் ஒற்றுமையையே தமிழ் மக்கள் விரும்புகின்றார்கள். ஒற்றுமையானது கொள்கை ரீதியிலேயே அமைய வேண்டும். தம்பி பிரபாகரன் அவர்கள் தனது இயக்கத்திற்கு எதிராக நடந்து கொண்ட கட்சிகள் 

பலவற்றைக்கூட ஒன்று சேர்த்து ஒரு அரசியல் கட்சியை உருவாக்கினார். அப்போது கூட்டமைப்புக்குள் உள்வாங்கப்பட்ட கட்சிகள் சில இன்று வெளியிலே நிற்கின்றார்கள். அது கொள்கை முரண்பாடுகள் காரணமாக இருக்கலாம். தனிப்பட்ட காரணங்களுக்காகவும் இருக்கலாம். 

ஆனால் ஒரு ஏற்கப்பட்ட கொள்கைத் திட்டத்தின் அடிப்படையில் பிரிந்துபோன எல்லாக் கட்சிகளையுஞ் சேர்த்து கூடிய வலுவுடைய ஒரு கட்டமைப்பை உருவாக்குவது காலத்தின் கட்டாயமாக அமைகின்றது. மத்தியில் கூட்டாட்சி மாகாணத்தில் தன்னாட்சி என்று கூறிவிட்டு மத்தியின் முகவர்களாக நடந்து 

கொண்டு வந்திருப்பவர்கள் எமது பயணத்திற்கு இடையூறு விளைவிக்கக் கூடியவர்கள். அதே போல் தேசியக்கட்சிகளின் அங்கத்தவர்கள் மத்தியின் கட்டுப்பாடுகளுக்குக் கட்டுப்பட்டவர்கள். அவர்கள் எமது உறவுகளாக இருந்தாலும் எமது பயணத்தில் சேரக்கூடியவர்கள் அல்ல. 

சிலர் என்னைத் தீவிர போக்குடையவர் என்று கூறுகின்றார்கள். அவர்களை எமது கட்சியின் தேர்தல் விஞ்ஞாபனங்களை வாசிக்கக் கோருகின்றேன். சிலர் மக்களின் வாக்கெடுக்க அப்படித்தான் விஞ்ஞாபனங்களில் போடவேண்டும் ஆனால் நாங்கள் அரசியல் செய்ய வேண்டுமென்றால் அவற்றையெல்லாம் 

புறம்தள்ளி வேலைசெய்ய வேண்டும் என்கிறார்கள். அவ்வாறானவர்கள் தான் என்னைத் தீவிர போக்குடையவர் என்று கூறுகின்றார்கள். அவ்வாறான போக்கை நான் கண்டிக்கின்றேன். மக்களை ஏமாற்றும் செயல்களில் ஈடுபடுவது பாவம் என்பதே எனது நிலைப்பாடு. 

விஞ்ஞாபனங்களில் கூறியிருப்பதை அசட்டை செய்வதாக இருந்தால் அவற்றை மாற்றி மக்களிடம் இருந்து பிறிதொரு முறை அவர்கள் ஆதரவைப் பெறுவது அவசியம். அண்மையில் கட்சி நலஞ் சார்ந்து பல உடன்படிக்கைகள் உள்ளுராட்சி மன்றங்களில் எட்டப்பட்டன.  

கொள்கை ரீதியாக அவை நடைபெறவில்லை. பதவி ஆசையே முக்கிய குறிக்கோளாக இருந்தது. விரைவில் இவ்வாறான கொள்கை அடிப்படை தவிர்ந்த உடன்பாடுகள் சுய இலாபங்களுக்காக முரண்பாடுகளை வருவிப்பன என்று எதிர்பார்க்கலாம். விட்டுக் கொடுக்க வேண்டும் என்று கூறி 

எம்மை நாம் விற்கும் நிலைக்கு வந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. ஆனால் சுய கௌரவத்துடனான இணைந்த அரசியலே மத்தியிலும் மாகாணத்திலும் கடைப்படிக்க வேண்டியுள்ளது. வெளியார் குடியேற்றம், பௌத்த விகாரைகள் 131 கட்டப்படுதல் போன்ற எல்லாவற்றிற்கும் 

சுய கௌரவத்துடனான இணைந்த அரசியலை நாம் நாடாததே காரணம். சில தினங்களுக்கு முன் கிழக்கு மாகாணத்தில் இருந்து வந்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் இது காறும் இருந்து வந்தவர்கள் இப்பொழுதும் இருந்து வருபவர்கள் கிழக்கு மாகாணத்தில் விட்டுக்கொடுத்ததால் ஏற்பட்ட கெடுதிகள் 

பற்றி எமக்கறிவித்தார்கள். நாம் வலுவாக இருந்து கொண்டு மற்றவர்களுக்கு விட்டுக் கொடுக்கலாம். ஆனால் நாம் பலம் அற்ற நிலையில் இருந்து கொண்டு விட்டுக்கொடுப்பது எம்மை நாமே அழித்துக் கொள்வதற்குச் சமமாகும் என்றார்கள். கிழக்கு மாகாணத்தின் தற்போதைய தமிழர் நிலை பரிதாபகரமாக 

மாறியிருப்பதை எடுத்துரைத்தார்கள். ஆகவே நாம் யாவரும் கூட்டுச் சேர வேண்டும்; ஒன்றுபட வேண்டும் எனும் போது அது கொள்கை அடிப்படையிலேயே நடைபெறவேண்டுமே  ஒளிய கொள்வோனுக்குக் கொத்தடிமையாகும் விதத்தில் நடைபெறக் கூடாது. 

தமிழ் மக்களின் அரசியல் நிலை இன்று பரிதாபகரமானதாக மாறியுள்ளது, கட்சி ரீதியாக நாம் பிரிந்துள்ளோம். ஆனால் எமது பல்வேறு  கட்சிகளின் தேர்தல் விஞ்ஞாபனங்களில் காணும் உள்ளடக்கங்களில் உள்ள முரண்பாடுகள் மிகச் சொற்பமே. 2013ம் ஆண்டு வெளிவந்த எங்கள் கட்சியின் தேர்தல் விஞ்ஞாபனத்தை அடிப்படையாக வைத்தே நான் எனது கருத்துக்களைத் தெரியப்படுத்தி 

வந்துள்ளேன். அரசியல் யாப்புப் பற்றிய எமது வடமாகாணசபையின் முன்மொழிவுகளும் தமிழ் மக்கள் பேரவையால் அரசாங்கத்திற்குக் கையளிக்கப்பட்ட முன்மொழிவுகளும் அடிப்படையில் பலத்த முரண்பாடுகளைக் கொண்டிருக்க வில்லை. 

அவை எமது 2013ம் ஆண்டின் விஞ்ஞாபனத்தை அடிப்படையாகக் கொண்டவையே. பின் எதற்காக மாறிய கொள்கைகள் உடையவர்களுடன் சேருகின்றோம், ஒரே கொள்கையுடையோருடன் முரண்டு பிடிக்கின்றோம்? இங்கு தான் தமிழ் மக்களின் தனிப்பட்ட மனோநிலை வெளியாகின்றது. 

அடிப்படையில் நாங்கள் ஆணைக்குக் கட்டுப்பட ஆயத்தமாய் உள்ளோம். ஆனால் அயலவர்களை ஆதரித்து அரவணைத்து ஆணவத்தை அடக்கி வைத்து பயணம் செய்ய முடியாதவர்களாக இருக்கின்றோம். இது இங்கு மட்டுமல்ல் வெளிநாடுகளிலும் தமிழ் மக்களிடையே காணும் ஒரு குணாதிசயம். 

தன்னைவிட தன்னினத்தவன் எவனும் தகைநிலையடையக் கூடாது என்பதில் கண்ணும் கருத்துமாக இருக்கின்றோம். அதனால் மாண்பு மிக்க எமது இனம் சீர்குலைந்து போவதையுஞ் சிறப்பிழந்து போவதையும் நாம் காணக்கூடியதாக இருக்கின்றது. நாங்கள் ஒவ்வொருவரும் எங்கள் கல்வி, 

கலாசாரம், சூழ்நிலை, உடல்நிலை, அனுபவங்கள் போன்ற பலவற்றின் ஊடாகத்தான் வாழ்க்கையைப் பார்க்கின்றோம். இதைத்தான் காலஞ்சென்ற தத்துவஞானி ஜிட்டு கிரு~;ணமூர்த்தி அவர்கள் “We are all conditioned human beings”  என்றார். 

அதாவது நாங்கள் யாவரும் சூழல் பலவற்றால் பாதிக்கப்பட்ட மனோநிலையில் வாழ்பவர்கள் என்றார். இதைப்புரிந்து கொண்டால் எம்மால் சேர்ந்து வாழ முடியும்.  போரினால் பாதிக்கப்பட்ட ஒருவரின் எண்ணங்களும் பார்வைகளும் தம்மை அந்த நிலைக்கு உள்ளாக்கியவர் மேலேயே கோபமாய் மாறியிருக்கும். 

மிகக் குறைந்த கல்வி அறிவு பெற்ற ஒருவர் குறைபாடுள்ள தனது அறிவின் மூலமாகத்தான் உலகைப் பார்க்கின்றார். உயர் சிந்தனைகளோ உயரிய கொள்கைகளோ அவரை அதிகம் ஆட்கொள்ள மாட்டா. ஆனால் அவருக்கும் தமது கருத்துக்களை வெளிப்படுத்த உரிமையுண்டு. 

வன்முறையில் ஈடுபட்டவர்கள் வன்முறைதான் வளமான ஆயுதம் வாழ்க்கைக்கு, என்பார்கள். என் சிங்கள நண்பர் ஒருவர் பிரதி மந்திரியாக 1977ல் நியமிக்கப்பட்டார். அவரைப்பாராட்டிய பின்னர் “அதிகாரம் உன் கைக்கு வந்துவிட்டது. அடுத்து என்ன செய்யப்போகின்றாய்?” என்று கேட்டேன். 

உடனே அவர் தேர்தலுக்கு செலவழித்த பணம் யாவற்றையும் மீளப்பெறுவதே தனது இலட்சியம் என்றார். அப்பொழுதிருந்தே பதவியை வைத்து அவர் நன்றாக உழைத்தார். தேர்தல் செலவுகளுக்கும் மேலாகப் பணம் ஈட்டினார். பின்னர் அவர் ஜே.வீ.பி யினரால் சுட்டுக் கொல்லப்பட்டார். 

அதே போல்த்தான் அரசியல் என்பது ஒரு வணிகம் என்ற நிலைப்பாட்டில் வளர்ந்த ஒருவர் அரசியலை வணிகமாகவே பார்ப்பார்;. தனக்கு அரசியலால் என்ன இலாபம் கிடைக்கும் என்றே அவர் பார்ப்பார். மக்கள் அவருக்கு ஒரு பொருட்டல்ல. வெவ்வேறு மனோநிலைகள் கொண்ட இவர்கள் யாவரையும் ஒன்றிணைத்துச் 

செல்வது அவ்வளவு இலேசான காரியமல்ல. ஆனாலும் இன்றைய எமது தமிழ் மக்களுக்கு ஒற்றுமை அவசியம். ஒருங்கிணைந்து செயற்படுவது அவசியம். உயரிய கொள்கைகளை உள்ளடக்கி அவற்றின் அடிப்படையில் சுயநலம் களைந்து முன்னேறுவதே இன்று தமிழ் மக்களுக்கிருக்கும் ஒரேயொரு 

அரசியல்ப்பாதை.