லிட்ரோ சமையல் எரிவாயு விலை சடுதியாக குறைப்பு!

லிட்ரோ சமையல் எரிவாயு விலையை குறைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக நிறுவனத்தின் தலைவர் முதித பீரிஸ் தெரிவித்துள்ளார்.
இதன்படி 12.5 கிலோ கிராம் லிட்ரோ சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை 400 ரூபா அளவில் குறைக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தற்போது 12.5 கிலோ லிட்ரோ சமையல் எரிவாயுவின் விலை 3,638 ரூபா என்பது குறிப்பிடத்தக்ககது.
இந்த விலைக்குறைப்பு நாளை 4ம் திகதி நள்ளிரவு முதல் அமுலுக்கு வரவுள்ளது.