SuperTopAds

யாழ்.மாவட்டத்தில் கட்டண மீற்றர் பொருத்தாத எந்தவொரு முச்சக்கர வண்டியும் பணிகள் சேவையில் ஈடுபட முடியாது! மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் தீர்மானம்...

ஆசிரியர் - Editor I
யாழ்.மாவட்டத்தில் கட்டண மீற்றர் பொருத்தாத எந்தவொரு முச்சக்கர வண்டியும் பணிகள் சேவையில் ஈடுபட முடியாது! மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் தீர்மானம்...

யாழ்.மாவட்டத்தில் பயணிகள் சேவையில் ஈடுபடும் சகல முச்சக்கர வண்டிகளும் கட்டண மீற்றர் பொருத்தவேண்டும் எனவும், கட்டண மீற்றர் பொருத்தப்படாத முச்சக்கர வண்டிகள் சேவையில் ஈடுபட முடியாது, தரிப்பிடங்களில் நிறுத்த முடியாது என யாழ்.மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது. 

குறிப்பாக கட்டண மீற்றர் பொருத்துவதற்கான கட்டணத்தினை கட்டண மீற்றர் பொருத்தும் நிறுவனத்துடன் கலந்தாலோசித்து முச்சக்கர வண்டி உரிமையாளர்களின் வாழ்வாதாரம் பாதிக்காத வகையில் அதனைப் பொருத்துவதற்குரிய ஏற்பாடுகளை செய்யுமாறும், கூட்டத்தில் பிரஸ்தாபிக்கப்பட்டது.