SuperTopAds

சிகிச்சைக்கு அதிகளவு பணம் செலவானதால் பாட்டியின் கழுத்தை அறுத்து கொலை செய்து சடலத்தை காட்டில் வீசிய பேரன் கைது!

ஆசிரியர் - Editor I
சிகிச்சைக்கு அதிகளவு பணம் செலவானதால் பாட்டியின் கழுத்தை அறுத்து கொலை செய்து சடலத்தை காட்டில் வீசிய பேரன் கைது!

57 வயதான தனது பாட்டியின் கழுத்தை அறுத்து கொலை செய்து சடலத்தை காட்டுக்குள் வீசிய 24 வயதுடைய பேரனைக் கைது செய்துள்ளதாக பதுரலிய பொலிஸார் தெரிவித்தனர்.

களுத்துறை மாவட்டத்தில் பொல்லுன்ன, பதுரலிய ஹடிகல்லவைச் சேர்ந்த லீலாவதி விக்கிரமசிங்க என்ற பெண்ணே இவ்வாறு படுகொலை செய்யப்பட்டுள்ளார்.

தனது பேத்தியார் சுகயீனமுற்றவர் என்பதாலும், அவரது சிகிச்சைக்காக பணம் செலவழிக்கப்பட்டதாலும் சந்தேகநபர் இந்த குற்றத்தை செய்துள்ளதாக பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

குறித்த பெண் சுகயீனமுற்று வைத்தியசாலையில் சிகிச்சை பெற்ற நிலையில், கொலைசெய்யப்படுவதற்கு முன்வீடு திரும்பியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.