பாடசாலை நிகழ்வில் மதங்களை இழிவுபடுத்தியதுடன், தகாத வார்த்தை பிரயோகம்! இளம்பெண் மீது முறைப்பாடு...
பெளத்தம், இஸ்லாம், கிறிஸ்த்தவம் ஆகிய மதங்களை இழிவுபடுத்தியதுடன் பாடசாலை நிகழ்வில் தகாத வார்த்தை பிரயோகங்களை பயன்படுத்திய இளம்பெண் ஒருவருக்கு எதிராக நேற்று குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
அண்மையில் கொழும்பில் உள்ள பிரதான பாடசாலை ஒன்றில் நடைபெற்ற நகைச்சுவை நிகழ்ச்சி ஒன்றை நடத்தும் வாய்ப்பு நதாஷா என்ற யுவதிக்கு கிடைத்தது.
அதன் தொடக்கத்திலிருந்தே, அவர் பௌத்தம், கிறிஸ்தவம் மற்றும் இஸ்லாம் ஆகிய மதங்களை அவமதித்து பார்வையாளர்களை சிரிக்க வைத்தார்.
பௌத்த பாடசாலைகள் குறித்தும் அவர் பொதுவெளியில் கடுமையாக விமர்சித்தார். அவமதிப்பு மட்டுமின்றி கெட்ட வார்த்தைகளும் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.