பலா விற்பனையில் இடம்பெற்ற தகராறே வர்த்தகர் கொலைக்கு காரணம்! பொலிஸ் விசாரணையில் அம்பலம்...
கொழும்பு - கல்கிசை பகுதியில் உள்ள உணவகத்தின் உரிமையாளர் குத்திக் கொல்லப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கொலைக்குப் பயன்படுத்திய கத்தியும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது. சந்தேக நபர் கடந்த 22ஆம் திகதி உயிரிழந்த நபரிடம் பலாப்பழம் விற்பனை செய்ய வந்ததாகவும் அதன்போது ஒரு பலாப்பழத்துக்கு 250 ரூபா தருமாறு கேட்டதாகவும்
உணவக உரிமையாளர் 200 ரூபா தருவதாக கூறியதாகவும் இதனால் ஏற்பட்ட வாக்குவாதமே மோதலாக மாறி இந்தக் கொலைச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாகவும் பொலிஸ் விசாரணைகளில் தெரிய வந்துள்ளது.