SuperTopAds

தூக்கில் தொங்கிய இளம்பெண்: நடந்தது என்ன?

ஆசிரியர் - Editor II
தூக்கில் தொங்கிய இளம்பெண்: நடந்தது என்ன?

இளம்பெண் ஒருவர் வீட்டில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் பிரிட்டன் வேல்ஸில் இடம்பெற்றுள்ளது.

Mollie Horton (வயது 22) என்ற இளம்பெண் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

தற்கொலை செய்து கொள்வதற்கு சில நாட்களுக்கு முன், உலகிற்கு இரவு வணக்கம், என்னை நானே அணைத்துக் கொள்கிறேன் என கூறியுள்ளார்.

பிறந்த போது, தாய்- தந்தை பிரிந்து சென்ற நிலையில், தாத்தாவின் கண்காணிப்பில் வளர்ந்தார் என்று கூறப்படுகிறது.

அதேவேளை, சொந்த பிரச்சனைகளின் காரணமாக அவர் இந்த முடிவினை எடுத்திருக்கலாம் என்று கூறப்படுகிறது.

கடந்தாண்டு உடல்நலக்குறைவால் தாத்தாவும் உயிரிழந்துள்ளார். இவரது தம்பியும் சிறையில் அடைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

கடந்த 2013ம் ஆண்டு ஆண் நண்பர் மூலம் பெண் குழந்தையும் உள்ளது. அனைத்தும் ஒன்றாக சேர்ந்தமையினால் மன அழுத்தம் காரணமாக குறித்த பெண் தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என பொலிசார் தெரிவிக்கின்றனர்.

மேலும் அவரது இரத்தத்தில் அதிகளவான ஆல்கஹால் கலந்திருந்ததும் தெரியவந்துள்ளது.