SuperTopAds

வடமாகாண ஆளுநர் திருமதி பி.எஸ்.எம்.சாள்ஸ் பதவியேற்றார்!

ஆசிரியர் - Editor I
வடமாகாண ஆளுநர் திருமதி பி.எஸ்.எம்.சாள்ஸ் பதவியேற்றார்!

வடமகாண ஆளுநர் திருமதி பி.எஸ்.எம்.சாள்ஸ் காலை 9.20 மணியளவில் தனது கடமைகளைப் பொறுப்பேற்றார்.

இந் நிகழ்வு இன்று திங்கட்கிழமை(22) காலை 9 மணியளவில் யாழ்ப்பாணத்தில் உள்ள வடமாகாண ஆளுநர் செயலகத்தில் குறித்த நிகழ்வு நடைபெற்றது.

கடமைகளை பொறுப்பேற்ற நிலையில் ஆளுநர் சர்வமத தலைவர்களிடம் ஆசீர்வாதத்தைப் பெற்றுக்கொண்டார்.

இரண்டாவது தடவையாக வடக்கு மாகாண ஆளுநராக பி.எஸ்.எம்.சாள்ஸ் தனது கடமைகளைப் பொறுப்பேற்றமை குறிப்பிடத்தக்கது.