SuperTopAds

திருட்டு குற்றச்சாட்டில் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்ட பெண் வைத்தியசாலையில் அனுமதி, மறுநாள் உயிரிழப்பு...

ஆசிரியர் - Editor I
திருட்டு குற்றச்சாட்டில் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்ட பெண் வைத்தியசாலையில் அனுமதி, மறுநாள் உயிரிழப்பு...

திருட்டுக் குற்றச்சாட்டில் பொலிஸ் நிலையத்திற்கு கொண்டு செல்லப்பட்ட 42 வயதான பெண் ஒருவர் திடீர் சுகயீனமடைந்ததை தொடர்ந்து கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின் உயிரிழந்துள்ளார். 

பிரபல தொலைக்காட்சி நாடக தயாரிப்பாளரும் வர்த்தக பிரமுகருமான சுதர்மா நெத்திகுமாரவின் வீட்டுப் பணிப் பெண்ணான மேற்படி பெண் தங்க மோதிரம் ஒன்றை திருடியதாக சுதர்மா நெத்திகுமார முறைப்பாடு செய்ததுடன், 

மே 11 ஆம் திகதி சந்தேகநபரான பெண்ணை பொலிஸாரிடம் ஒப்படைத்தபோது தனக்கு வலி ஏற்பட்டுள்ளதாக பொலிஸாரிடம் அவர் தெரிவித்துள்ளார். இதனையடுத்து அவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். 

மேலும், உரிமையாளர்கள் அவரை பொலிஸ் நிலையத்துக்கு அழைத்துச் சென்றபோது, குறித்த பெண் சுவாசிக்க சிரமப்பட்டதால் அவர் வைத்தியசாலைக்குக் கொண்டு சென்றதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

இந்நிலையில், சிகிச்சை பலனின்றி மறுநாள் குறித்த பெண் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இச்சம்பவம் தொடர்பாக வெலிக்கடை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.