திருட்டு சம்பவங்களுடன் தொடர்புள்ளதாக குற்றஞ்சாட்டப்பட்ட நபர் கோடரியால் வெட்டிக் கொலை!
கைவிடப்பட்ட வீடொன்றில் தனிமையில் உறங்கிக் கொண்டிருந்த 32 வயதான நபர் கோடரியால் வெட்டிக் கொல்லப்பட்டுள்ளார். இந்த சம்பவம் முதுன்கொட என்ற இடத்தில் நேற்று இடம்பெற்றிருக்கின்றது.
துசித குமார (32) என்ற நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். குறித்த நபர் அப்பகுதியில் திருட்டுச் சம்பவங்களில் ஈடுபட்டதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். தொம்கொட பிரதேசத்தில்
கைவிடப்பட்ட வீடொன்றில் உறங்கிக் கொண்டிருந்தபோதே குறித்த நபர் சிலரால் கொலை செய்யப்பட்டுள்ளார். இந்த கொலை தொடர்பாக, அந்த பகுதியை சேர்ந்த இருவர் விசாரணைக்காக கைது செய்யப்பட்டுள்ளனர்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை ஹுரிகஸ்வெவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.