SuperTopAds

லொறி ஒன்றிலிருந்து பெருமளவு பணம் கொள்ளை! பொலிஸ் உத்தியோகஸ்த்தர் ஒருவருக்கு நெருங்கிய தொடர்பு..

ஆசிரியர் - Editor I
லொறி ஒன்றிலிருந்து பெருமளவு பணம் கொள்ளை! பொலிஸ் உத்தியோகஸ்த்தர் ஒருவருக்கு நெருங்கிய தொடர்பு..

கிரானகம - புதுகெஹின்ன பகுதியில் லொறி ஒன்றிலிருந்து பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவத்துடன் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவருக்கும் தொடர்பு உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இதன்படி, சந்தேக நபரைக் கைது செய்வதற்கான பொலிஸ் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக கிரானகம பொலிஸார் தெரிவித்தனர். 

சம்பவம் தொடர்பில் கைதுசெய்யப்பட்ட சந்தேக நபர்களில் ஒருவர் வழங்கிய வாக்குமூலத்தின் அடிப்படையில் குறித்த பொலிஸ் உத்தியோகத்தர் சம்பவத்துடன் தொடர்புடையவர் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

எவ்வாறாயினும், இந்தச் சம்பவத்தின் பின்னர் சந்தேகத்துக்குரிய பொலிஸ் உத்தியோகத்தர் இதுவரை பணிக்கு சமுகமளிக்கவில்லை என கிரானகம பொலிஸார் தெரிவித்தனர்.

சந்தேகத்துக்குரிய பொலிஸ் உத்தியோகத்தர் சிலாபம் பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் பொலிஸ் உத்தியோகத்தராவார்.

பல மாதங்களாக அவர் பணிக்கு சமுகமளிக்காத காரணத்தினால் சந்தேக நபர் சேவையை விட்டு விலகியுள்ளதாக கருதப்படுவதாகவும் கிரானகம பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

சம்பவம் தொடர்பில் இரண்டு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் கூறினர்.