SuperTopAds

கொத்து ரொட்டியில் பழுதடைந்த இறைச்சி! யாழ்.ஆனைப்பந்தியில் உணவகத்திற்கு சீல்....

ஆசிரியர் - Editor I
கொத்து ரொட்டியில் பழுதடைந்த இறைச்சி! யாழ்.ஆனைப்பந்தியில் உணவகத்திற்கு சீல்....

யாழ்.ஆனைப்பந்தி பகுதியில் பழுதடைந்த இறைச்சியை பயன்படுத்தி கொத்து ரொட்டி தயாரித்த உணவகம் சீல் வைத்து மூடப்பட்டுள்ளது.

கொத்து ரொட்டியில் இருந்த இறைச்சி பழுதடைந்திருந்தமை தொடர்பில் யாழ்.மாநகர பொதுச் சுகாதார பரிசோதகர் பு.ஆறுமுகதாசனுக்கு கிடைத்த முறைப்பாட்டின் அடிப்படையில், 

மாநகர சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் பாலமுரளி தலைமையில் யாழ்.மாநகரசபை பொதுச்சுகாதார பரிசோதகர்கள் நேற்றைய தினம் வியாழக்கிழமை குறித்த உணவகத்தில் திடீர் பரிசோதனை மேற்கொண்டனர். 

இதன்போது பழுதடைந்த குளிர்சாதன பெட்டியில் சுகாதார சீர்கேடான முறையில் சமைத்த சமைக்காத கோழி இறைச்சி, மாட்டிறைச்சி, ஆட்டிறைச்சி என சுமார் 45 கிலோ இறைச்சி களஞ்சியப்படுத்தப்பட்டிருந்தமை கண்டுபிடிக்கப்பட்டதுடன்,

மேலும் பல குறைபாடுகள் இனங்காணப்பட்டது. இதனையடுத்து இன்று வெள்ளிக்கிழமை பொது சுகாதார பரிசோதகர் பு.ஆறுமுகதாசனால் மேலதிக நீதவான் நீதிமன்றில் “B” பத்திரத்தினூடாக வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. 

வழக்கினை விசாரித்த நீதவான் கடையினை மறு அறிவித்தல் வரை மூடி சீல்வைக்குமாறும், கைப்பற்றப்பட்ட 45kg இறைச்சியினை அழிக்குமாறும் பொது சுகாதார பரிசோதகரிற்கு உத்தரவிட்டதுடன் 

வழக்கினை யூன் மாதம் 28ம் திகதிக்கு ஒத்திவைத்தார். இதனையடுத்து குறித்த கடை சீல் வைக்கப்பட்டதுடன், கைப்பற்றப்பட்ட சுமார் 45kg இறைச்சியும் பொது சுகாதார பரிசோதகரால் அழிக்கப்பட்டுள்ளது.