மதுபோதையில் மோட்டார் சைக்கிள் ஓட்டிய இளைஞனுக்கு 2 மாத சிறைத்தண்டணை விதித்துள்ள யாழ்.நீதிவான் நீதிமன்றம்..
மதுபோதையில் மோட்டார் சைக்கிள் செலுத்தியமை மற்றும் தலைக்கவசம், சாரதி அனுமதிப் பத்திரம் இல்லாமை போன்ற குற்றச்சாட்டுக்களில் கைதான இளைஞருக்கு 2 மாதச் சிறைத்தண்டணை விதித்து யாழ்.நீதிவான் நீதிமன்று உத்தரவிட்டுள்ளது.
மதுபோதையில் மோட்டார் சைக்கிளை செலுத்தியமை , தலைக்கவசம் அணியாமை , சாரதி அனுமதி பத்திரம் இன்றி வாகனம் செலுத்தியமை , உள்ளிட்ட குற்றச்சாட்டில் இளைஞன் ஒருவரை கோப்பாய் பொலிஸார் கைது செய்து இருந்தனர்.
கைது செய்யப்பட்ட இளைஞனை நேற்றைய தினம் வியாழக்கிழமை நீதவான் நீதிமன்றில் முற்படுத்திய வேளை , இளைஞன் தன் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுக்களை ஏற்றுக்கொண்டதை அடுத்து ,
இளைஞனுக்கு இரண்டு மாத சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளித்தது யாழ்.நீதவான் நீதிமன்று.