சடலமாக மீட்கப்பட்ட 16 வயது சிறுமிக்கு வந்த கடைசி தொலைபேசி அழைப்பு ஒரு ஆசிரியருடையது! விசாரணை குற்ற புலனாய்வு பிரிவிடம் கைமாறியது..
மாணவி ஒருவரின் சடலம் நிர்வாண நிலையில் மீட்கப்பட்ட சம்பவத்தில், குறித்த மாணவிக்கு ஆசிரியர் ஒருவரிடமிருந்து இறுதியாக தொலைபேசி அழைப்பு வந்துள்ளமை விசாரணைகளில் தெரியவந்துள்ள நிலையில்,
குறித்த ஆசிரியரிடமும் பொலிஸார் விசாரணைகளை மேற்கொள்ளவுள்ளதுடன், மேற்படி வழக்கு விசாரணைகள் பொலிஸ்மா அதிபரின் பணிப்பிற்கமைய குற்றப் புலனாய்வு பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டிருக்கின்றது.
இதேவேளை மாணவியின் மர்ம மரணம் தொடர்பான விசாரணைகளில் அவர் தங்கியிருந்த விடுதி உரிமையாளரின் மனைவியும் இன்று கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த பெண் களுத்துறை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டு எதிர்வரும் 15ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
இதேவேளை பொலிஸாரின் விசாரணைகளின் போது உயிரிழந்த மாணவிக்கு ஆசிரியர் ஒருவரிடமிருந்து கடைசி தொலைபேசி அழைப்பு வந்துள்ளதாக தெரியவந்துள்ளது.
அதன்படி அவரிடம் வாக்குமூலம் பதிவு செய்ய பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர். அவருக்கும் குறித்த மாணவிக்கும் இடையில் ஏதாவது தொடர்பு இருந்திருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.