மதுபோதையில் 75 வயதான வயோதிப பெண்ணை துஷ்பிரயோகம் செய்தவர் தலைமறைவு!
மதுபோதையில் 75 வயதான வயோதிப பெண்ணை பாலியல் துஷ்பிரயோகம் செய்த நபர் தலைமறைவாகியுள்ள நிலையில், பாதிக்கப்பட்ட வயோதிப பெண் பதுறை மாகாண பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
செவ்வாய்க்கிழமை (09) அவர் இவ்வாறு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதேவேளை, சம்பவத்துடன் தொடர்புடைய 51 வயதுடைய சந்தேக நபர் பிரதேசத்தை விட்டுத் தப்பிச் சென்றுள்ளதுடன்,
அவரைக் கைது செய்வதற்கான நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.சம்பத்துடன் தொடர்புடைய நபர் அதிக போதையில் காணப்பட்டதாக கூறியுள்ள பொலிஸார் சந்தேகநபரை தேடும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக குறிப்பிட்டுள்ளனர்.