போதனா வைத்தியசாலைக்குள் நுழைந்து இளைஞனை வெட்டிக் கொலை செய்த இருவர் கைது!
போதனா வைத்தியசாலைக்குள் நுழைந்து நோயாளியை வெட்டிக் கொலை செய்த சம்வத்துடன் தொடர்படைய இருவர் கொழும்பு - தெமட்டகொட பகுதியில் கைது செய்யப்பட்டிருக்கின்றனர்.
அண்மையில் மோதல் ஒன்றில் காயமடைந்த நிலையில் அனுராதபுரம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த இளைஞன் ஒருவனை வைத்தியசாலைக்குள் நுழைந்த மர்மநபர் வெட்டிக் கொலை செய்திருந்தார்.
சம்வம் தொடர்பான விசாரணைகளை மதவாச்சி பொலிஸார் மேற்கொண்டிருந்த நிலையில் சந்தேகநபர்கள் இருவரும் கைது செய்யப்பட்டிருக்கின்றனர்.
மதவாச்சி - விஹாரை பிரதேசத்தில் வசிக்கும் 27 வயதுடைய ஒருவரும் மதவாச்சி - கோனா கும்பக்கொல்லாவ பிரதேசத்தில் வசிக்கும் 32 வயதுடைய ஒருவருமே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
சந்தேக நபர்கள் இருவரிடமும் கொலைக்கு பயன்படுத்திய கத்தி கையடக்கத் தொலைபேசி சிம் அட்டை மற்றும் கொலையின்போது அவர்கள் அணிந்திருந்த ஆடைகள் என்பனவற்றை கைப்பற்றியதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.