50 ஆயிரம் ரூபாய் லஞ்சம் வாங்க முயற்சித்த பொலிஸ் சார்ஜன்ட் கைது!
50 ஆயிரம் ரூபாய் பணத்தை லஞ்சமாக வாங்கிய குற்றச்சாட்டில் பொலிஸ் சார்ஜன்ட் ஒருவர் லஞ்ச ஒழிப்பு ஆணைக்குழு புலனாய்வாளர்களால் கைது செய்யப்பட்டுள்ளார்.
தமன பிரதேசத்தில் வசிக்கும் ஒருவருக்கு எதிராக அம்பாறை நீதிவான் நீதிமன்றில் நிலுவையில் உள்ள வழக்கு ஒன்று தொடர்பில் சாதமாகச் செயற்படுவதற்காகவே
இந்த இலஞ்சம் கோரப்பட்டுள்ளதாக ஆணைக்குழு தெரிவித்துள்ளது. கைது செய்யப்பட்ட சந்தேக நபரான பொலிஸ் சார்ஜன்ட் தொடர்பான மேலதிக விசாரணைகளை
ஆணைக்குழுவின் புலனாய்வு அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர்.