SuperTopAds

யாழ்.வலி,வடக்கு - தையிட்டி போராட்டத்தில் கலந்துகொள்ள சென்றிருந்த இருவர் கைது..

ஆசிரியர் - Editor I
யாழ்.வலி,வடக்கு - தையிட்டி போராட்டத்தில் கலந்துகொள்ள சென்றிருந்த இருவர் கைது..

யாழ்.வலி,வடக்கு தையிட்டியில் இடம்பெறும் போராட்டத்திற்குச் சென்றிருந்த இருவர் காங்கேசன்துறை பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர். 

இன்று அதிகாலை போராட்டத்தில் ஈடுபட்டுவரும் நாடாளுமன்ற உறுப்பினர் உள்ளிட்ட சிலரை பார்க்க சென்றவர்களில் இருவரே கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

கைது செய்யப்பட்டமைக்கான காரணம் இதுவரை பொலிஸார் தரப்பில் இருந்து தெரிவிக்கப்படவில்லை.

யாழ்ப்பாணம் வலிகாமம் வடக்கு தையிட்டியில் சட்டவிரரோதமாக அமைக்கப்பட்டுள்ள விகாரையை அகற்றுமாறு வலியுறுத்தி நேற்று(03) மாலை முதல் போராட்டம் இடம்பெற்றுவரும் நிலையில்

 நேற்று இரவு முதல் போராட்டகாரர்களை அச்சுறுத்தி பொலிஸார் அவர்களை அங்கிருந்து அகற்றும் பணியில் ஈடுபட்டனர்.

குறிப்பாக அப்பகுதிக்குள் ஊடகவியலாளர்கள் உட்பட பொதுமக்கள் யாரும் நுழையமுடியாதவாறு பொலிஸார் வாகனங்களை வீதிக்கு குறுக்கே நிறுத்தி தடையேற்படுத்தினர்.

போராட்டத்தில் ஈடுபட்ட சிலருக்கு வெளியில் இருந்து உணவு, நீர்,மருந்து என்பவற்றை எடுத்து செல்ல அனுமதிக்காத பொலிஸார் சில மணி நேரங்களுக்கு பின்

 மனித உரிமை ஆணைக்குழுவின் தலையீட்டால் உணவு, நீர்,மருந்து என்பவற்றை எடுத்துச் செல்ல அனுமதித்தனர்.